ஆசிரியர் தினம்
கலங்கமில்லா மழலைகள்
கருத்தூன்றிக் கிடக்கும்
இளம் மாணவர்கள்,
அனைத்து வயதினரையும்
சந்திக்க வைக்கும்
இவ் ஆசிரியப் பணி...
நூல் கொண்டு ஆடைநெய்வர்
நெசவாளர்...
நூல்கொண்டு அறிவு ஈயவந்தோம்
ஆசிரியர்களாய்......
என்னிடம் தூவப்பட்ட விதைகளை
பொன்மணிகளாக இவ்வுலகில்
"பிரகாசிக்க செய்வோம் ..."
சந்தேகம் உண்டுபண்ணும்
ஆசானாய் நாமிருப்போம்...
மறவாமல் தீர்வையும்
நாமே கொடுத்திடுவோம்...
அனைத்தும் கற்றுத்தெளிந்த
விற்பன்னராய் நாமிருப்போம்...
'இதனை வெறுத்து இதனை விரும்பு
என இடித்துரைத்திடுவோம்...'
எவ்வகை மாணவர்களையும்
கவர்ந்திழுப்போம் நம் அறிவால்...
நாம் பழகும் விதத்தால்...
நம்போல் சிறந்த ஆசானாக
உருவெடுக்க தூண்டுவோம்
மாணவர்களை...
இதுவே நம் ஆசிரியப் பணிக்குக்
கிடைத்த வெற்றியாய் கருதுவோம்...
இன்னொரு இராதாகிருஷ்ணனாக
உருமாற எடுத்துவைப்போம்
நம் முதல் அடியினை
"இந நாள் முதல்..."
- ரேணு