இது இருவர் இணைந்த காதல் - சி எம் ஜேசு

சூரியன் சுட்டு வெந்த மண்ணிலே
குடைக்கொண்டு அமர்ந்து புரியும் காதல்

பள்ளி விட்டவுடன் துள்ளி ஓடிவந்து
வெட்கம் அறியாமல் நிற்கும் காதல்

இடமில்லா மரத்தடியில்
இடைவெளி இல்லாது அமரும் காதல்

பேரூந்தின் மூலையில் தலைகள் கவிழ்த்து
கதைகளை அவிழ்த்துவிடும் காதல்

மழை அடித்தாலும் குடை இருந்தும் மறந்து
நனைந்து நடுங்கி குளிரில் நடக்கும் காதல்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (30-Jun-14, 3:25 pm)
பார்வை : 131

மேலே