காதல் நதி
நீ இல்லாத நேரங்களில்
நீளமான இரவில் நான் செல்லும் கண்ணீர் பயணம்
உறக்கங்கள் பெரிதல்ல -உன்
நினைவுகளில் மிதக்கும் போது
புன்னகைக்க தோன்றவில்லை -அதை
பொக்கிஷமாய் சேர்த்து வைத்தேன் நீ வந்தவுடன் பரிசளிக்க
கனவுகள் கண்டு களைத்து விட்டேன் -கண்
மூடும் முன்பு அன்பே உன் முகம் காட்டு
பிம்பங்கள் தேவை இல்லை பிறை நிலவை தேடும் குழந்தை இது
துணையாய் நீ வந்தால் உன் கரம் பற்றிக்கொள்ள துடிக்கிறது
எத்தனை நாள் இப்படியே வற்றிப்போகும் - என்
எண்ணமெல்லாம் நீயெனவே மாற்றிப்போகும்
கொட்டுகின்ற மழையினிலே கரையை தாண்டும் -கடல்
வற்றினாலும் வற்றாது என் காதல் நதி