நோயில் விழுந்த மனிதன் என்ற கணிகரத்தினால்

நான் கட்டு பட்ட கதைகள்
அவன் கட்டளை எனும் வதைகள்

சுட்டு, சுட்டு அவன் சிரித்த
நேரங்கள், புகை பிடிக்கும் சமயத்தில்

எட்டி உதைக்க, அதை நான் மேனியில்
தாங்கி அழுத காலங்கள்

மது போதையில் இழிவான, தர
குறைவான ஏச்சுக்கள், அதை கேட்டு
துடித்த நொடிகள்

மன்னிக்க முடியாத சித்திரவதைகள்
நான் கரு சுமந்திருக்கும் நேரத்திலும்

இன்று அவன் மரணபடுக்கையில்
ஒரு துளி நீருக்கும் என்னை எதிர்பார்த்து

பழி வாங்க என் மனம் துடித்தாலும்
இழிவான செயல் நான் செய்தால் அவனுக்கும்
எனக்கும் என்ன வித்தியாசம்?

அதனாலே பணி புரிந்தேன், சோறூட்டி
நீராட்டி,

கணவன் என்றல்ல, நோயில் விழுந்த
மனிதன் என்ற கணிகரத்தினால்....!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (2-Jul-14, 3:10 pm)
பார்வை : 102

மேலே