அன்னக்கொடி
அத்தை மகளே அன்னக்கொடி
அள்ளி கொள்ளவா உன் எண்ணப்படி ..
தொட்டா சிலிர்க்கிற சின்னகொடி
கை பட்டா இனிக்கிற வெல்லப்பொடி..!!
மேகமா நீண்டதென்ன கூந்தலா ..
மின்னலாய் தெரிப்பதென்ன பார்வையா..?
ராகமாய் பேசுதே உன் மோகனம்
தாகமே சேர்க்குதே உன் கீர்த்தனம் ...!
காற்றில் வருகுது உன் வாசம்...
கண்ணே நான் உன் வசம்..!!
அசையும் விரல்கள் பத்தும் பூக்களா ..
அழகே பேசும் விழிகள் முட்களா..??
அதரம் இனிக்கும் பலா சுளையா ..
ஆறடி உயரம் நீ இன்பச் சுனையா..?
ஆடையாய் உன்னை மூடவா
அதிசயம் அதிலே தேடவா..???