கண்ணின் மணி
கண்ணே
கண்ணா கண்ணா என்று அந்த கண்ணனை நினைவுறுத்தும் உந்தன்
கன்னி பேச்சு எந்தன் மனதை கண்ணிபோக வைத்தது
விளைந்தேன் உந்தன் மனதை கவர எண்ணி
கலைந்தேன் எந்தன் தூக்கத்தை
என்னவென்று சொல்வேன் உன் பொற்றாமரை முகத்தை
சிவ்வென்று சென்றது என் மயிர் மேலே உடலெங்கும்
நினைத்து நினைத்து பார்க்க துடிக்கிறேன் ஆனால்
பதைத்து பதைத்து ஏற்க எண்ணி வடிக்கிறேன்
காரண காரியம் அறிய துடித்தேன் கண்டேன் சீதையை
வாரணம் ஆயிரம் கண்டேன் கண்ணின் மணிகளில்.