விரிந்த வானில் ஒரு விடிவெள்ளி

விரிந்த வானில்
ஒரு விடிவெள்ளி !
விரிந்திடும் கதிர்களில்
ஒரு புதிய உதயம் !
மலர்ந்திடும் பூக்களில்
ஒரு புது வாசம் !
வீசிடும் தென்றலில்
ஒரு புது இனிமை !
தெரிந்தது ஒரு புதிய திசை !
புரிந்தது ஒரு புதிய பயணம் !
புறப்பட்டன கால்கள் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jul-14, 8:41 am)
பார்வை : 117

மேலே