பூப்பறிக்க கோடரி தேவையில்லை
நீ
வெளியில்
வரும்போதெல்லாம்
பூச்சூடிக் கொள்கிறது
சூழல் !
============================
உன் பாதம்
நோகக் கூடாதென்று
நீ வரும்பாதையில்
பூக்களைக் கொட்டிவைத்தேன் !
என்னைக்
கண்டபடி
திட்டித் தீர்த்தது
பூமி !
============================
உன் புன்னகைக்கு
காரணங்கள்
தேவையில்லை !
என் காரணங்களுக்கு
உன் புன்னகை
தேவை !
============================
ஒரு
பூவைப் பறிக்க
கோடரி எதற்கு ?
அதுபோல்
உனக்கான
கவிதைகளுக்கு
சிந்தனை
எதற்கு ?
============================
உன்
கன்னம் சிவந்திருந்தால்
அது
வெட்கம் !
மூக்கு சிவந்திருந்தால்
அது
கோபம் !
இரண்டுமே சிவந்திருந்தால்
அது
பொய்கோபம் !
============================
ஒரு அழகான
ஓவியத்தைப் பார்த்து
நீ
வியந்து கொண்டிருந்தாய் !
ஒரு அழகான
வியப்பைப்பார்த்து
நான்
வியந்து கொண்டிருந்தேன் !
==============================
- கிருஷ்ண தேவ்