துணிவு வேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
சாதனை படைக்க சிறிது துணிவு வேண்டும்
சரித்திரத்தில் இடம் பிடிக்க மிக்க துணிவு வேண்டும்
சாதனை படைக்க சிறிது துணிவு வேண்டும்
சரித்திரத்தில் இடம் பிடிக்க மிக்க துணிவு வேண்டும்
கனவு கண்டு சுகித்து பின் கண்விழிக்காமல்
கனவுடனேயே கண்விழிக்க நிஜமாக்க துணிவு வேண்டும்
அறிவுரை என்ற பேரில் அலைகழிபவரை மீறி
நினைப்பதை நடத்தி காட்ட மிக்க துணிவு வேண்டும்
அப்போதே சொன்னேன் கேட்காமல் கஷ்டம் பாரு என்ற
அபத்தமான வார்த்தை பொய்யாக்க துணிவு வேண்டும்
ஜான் ஏறினாலும் முழம் சறுக்கினாலும் சளைக்காமல்
வாழ்க்கை சறுக்குமரத்தில் விளையாட் துணிவு வேண்டும்
நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்து யோசிக்காமல்
குதித்து எதிர்நீச்சல் போடுவதற்கு நல்ல துணிவு வேண்டும்
சாதனை படைக்க சிறிது துணிவு வேண்டும்
சரித்திரத்தில் இடம் பிடிக்க மிக்க துணிவு வேண்டும்
சாதனை படைக்க சிறிது துணிவு வேண்டும்
சரித்திரத்தில் இடம் பிடிக்க மிக்க துணிவு வேண்டும்