முதல் காதல் என் உயிர் உருக்கி

முதல் காதல்...
என்றும் மின்னலாய்
என் இதயச்சுவடுகளில்....

காதல்மின்னல் பார்க்க அழகு
தொட்டப்பின் 'ஷாக்' அடித்து
இறந்தப்பின்புதான் தெரிந்தது - இதய
மரணமும் அழகு!

அழகிய பூங்காவனம்
என் இதயம் - இன்னும்
நிறைய பூச்செடிகளை நட்டு
நந்தவனமாக்குவாய் என்றிருந்தேன்...
பூச்சிக்கொள்ளி மருந்தை மட்டும்
தூவி தூவி....
இதயம் எனும்
மண்ணின் பசுமையைச்
சூரையாடிவிட்டாய்!!
மனம் இறந்தாலும்
பெருமையடித்து கொள்கிறது
அவன் என் முதல் காதல்...


என் காதலுக்கு அறிவில்லை;
அனுபவமும் இல்லை...
அசாத்திய நம்பிக்கை மட்டும் கொண்டது
என் தவறுதான்...
உணர்த்திவிட்டாய் உன் காதல் - பசுத்தோல்
போர்த்திய துரோகம் என்று...

காதல் வாசம் தெரியாத முன், கேட்டார்கள்
காதல் என்றால் என்ன?
அதன் மறுபெயர் என்ன?
நான் சொன்னேன்,
காதல் இனிமையான ஒரு விஷயம்.
அதன் மறுபெயர் தெய்வீகம்...

இப்பொழுது கேளுங்கள், சொல்கிறேன்
காதல் என்றால் உயிரை உருக்கும் விஷம்....
அதன் மறுபெயர் உயிர் உருக்கி...

வாழ்நாள் முழுதும்
உயிரை உருக்கும் வலியைக் கொடுத்த
என் முதல் காதலே...
நீ நீடூழி வாழ்க, உன் சந்ததியினர் வாழ்க....!

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (6-Jul-14, 9:54 pm)
பார்வை : 324

மேலே