ஏழ்மை
நான் ஏழையாக பிறந்ததற்கு
என்றுமே வருத்தப்பட்டது கிடையாது...
ஏனெனில் அளவுக்கதிகமான தூய அன்பு
இங்குதான் வாழ்கிறது!
ஆனால்,
அன்புள்ளவர்களுக்கு
நினைத்த மாத்திரத்தில்
உதவ முடியாததால்
இன்றுதான் முதல்முறை
இன்னும் என் வாழ்வில்
வாழ்ந்துவரும் ஏழ்மையை
எண்ணி வருந்துகிறேன்...
இது இயலாமையா?
அல்லது கிரகப்பலனா?
இறைவா !
உன் பாதங்களைப் பற்றி ஒன்று கேட்கிறேன்..!
உன் கடுமையான
வாழ்க்கைத் தேர்வில் நான் தேறவில்லையா?
அடிமேல் அடி அடித்தால்தான்
இந்த உளி நன்கு உழைக்கும்
என்று நினைத்தாயோ?
நீ நினைக்கும் சிற்பத்தை நான் உருவாக்குவேன்
என்னை நொடிக்கு நொடி அடிக்கும் சிற்பியே
நிறுத்தாதே உன் அடியை!!