கள்வனே
![](https://eluthu.com/images/loading.gif)
கள்வனே
மது கள்வனே
என் இதழ் தீண்டி அதில்
உன் கரம் தோண்ட
உடையும் தேகத்தில்
உடைத்தெழும் மோகத்தில்
மெய் சிலிர்த்து நான் முனகலிட
நீயோ
ஆர்பாட்டம் இன்றி
அமைதியாய்
உன் மென்கரம்
கொண்டு விளையாடி
சத்தமின்றி ஓர்
முத்தம் கொடுத்து என்
மொத்த பெண்மையை
சுத்தமாய் ருசித்து
பசி தன்னையாற்றி
மலர் தேகம் வாட்டி
பறந்துவிடும் கள்வனாய்............
தப்பி போகிறாயே
நானோ தப்பாய் நினையாது
தினம் தினம் உனக்காக ரொப்பி
வைக்கிறேனே நீ குடிக்க
மதுவோடு என்
ஆசைகளையும் அதை
உணர்வாயா...........?
என் மன கள்வனே
மது கள்வனே
இதழ் கள்வனே
இம்மலரின் இதய கள்வனே............!