தவம்

வெண்மலரே அட
உன்னைத்தான்
எழமாட்டாயா..........?

ஓ தவமா.........?

அடடா ஒற்றை காலில்
நெடு நேரம்
தவம்புரியும் வெண்தாடி
சூடிய மலர்முனியே
நீ கேட்கும் வரம் என்ன...........?

ஓ வெண்மையில்
உனை மிஞ்சும்
பாதம் பட உலகு கெஞ்சும்
சிரித்தபடி சாலை
கடக்கும்
மெல்லிடையோடு
தளிர்நடைபோடும்
இருகால் மலரின்
கூந்தல் இருக்கை
வேண்டியோ...........?

ம்ம்ம் புரிகிறது
மலரே

எழுதியவர் : கவியரசன் (7-Jul-14, 8:53 am)
Tanglish : thavam
பார்வை : 119

மேலே