பிரம்மாஸ்திரம்

பிரம்மாஸ்திரம்

விழிக்குள் சுதந்திரமாய்
இருக்கும் இரு கருவண்டுகள்

என் இறகுகள் சரிந்துவிட்டன
அதிலிருந்து
பறக்க இயலாது.............!

இவை வெறும் பார்வைகளா.........?
மின்னலின் கோர்வைகளா........?
பார்க்கும் இடமெங்கும்
தாக்கம் நிகழ்கிறது

ஏக்கம் எங்கிருந்தோ என்னுள்
எட்டிப்பார்கிறது இனி
தூக்கம் கலையுமோ........?
இல்லை
துக்கம் விளையுமோ........?

அப்பப்பா ஓர் அடியில்
வீழுத்தும்
பிரம்மாஸ்திரம்
வைத்த வளைந்த வில்
விழிகள்................!

எழுதியவர் : கவியரசன் (7-Jul-14, 8:57 am)
Tanglish : pirammaasthiram
பார்வை : 132

மேலே