உல்லாச பாத யாத்திரை - நாகூர் லெத்தீப்

மானத்தை
காத்தில் பறக்கவிடும்
இருசக்கர
போட்டிகள்..........!

வீதியிலே
வெட்கம் விலை
இல்லாமல்
விற்கப்படும் அவலம்.........!

இளம்
பெண்களின்
மானம் பறிபோகும்
உல்லாச பயணம்.........!

சமூகத்தின்
சாபக்கேடு
இருவர் செய்யும்
சாதனை.........!

பிடித்தால்
பழகலாம் ஆசையை
பரிமாறலாம்..........!

தேகத்தின்
வெப்பம்
உரசலின் உச்சம்..........!

ஒழுக்கமான
வாழ்க்கை
திகட்டிவிட்டதோ
இவர்களுக்கு.........!

பெரியோர்களின்
அறிவுரை
தண்ணீரில் எழுதிய
எழுத்துக்களே
இவர்களுக்கு.........!

குடும்பத்தின்
பெயரை கெடுக்க
வந்த நிரந்தரமற்ற
உறவு இதோ..........!

சாலையோரா
கண்காட்சி
விபச்சாரம்
இதெல்லாம்
ஒரு சமாட்சாரமா..........!

தடுப்பதில்லை
சீரழியும்
இளம் பெண்களை
காப்பதில்லை.........!

நினைப்பதில்லை
மானத்தை
பெரிதாக
பார்ப்பதில்லை
இந்த பருவத்திலே.........!

வேடிக்கை
மட்டும் பார்க்க
பொருள் கண்காட்சி
என்றுமே
வீதியிலே.........!

விவாகரத்து
முடிவிலே
நிம்மதியில்லை
உறவிலே..........!

சட்டங்கள்
சரியில்லை
சமூக குற்றங்கள்
தடுபதில்லை...........!

திருமணமோ
ஒருவரிடம்
மறுமணமோ பலரிடம்.......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (7-Jul-14, 10:06 am)
பார்வை : 89

மேலே