நல்ல பேச்சாளனுக்கு அடையாளம் எது

ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தில் பிரமாதமாக பேசிக்கொண்டிருப்பார் ஒருவர். ஒரு பத்து பேருக்கு முன்னால் மேடையேறி பேசச்சொல்லிப்பாருங்கள்...அய்யோ ஆளை விடுங்க...நாலுகால் பாய்ச்சலில் தலைதெறிக்க ஓட்டமெடுப்பார்.பேசுவது ஒரு கலை....என்றால் எல்லோரும் ரசிக்கிறமாதிரி பேசுவதென்பதோ இறைவன் அளித்த கொடை, இனிய வரம். சிலபேர் மட்டுமே அதில் வல்லவர்களாயிருக்கிறார்கள். நல்ல பேச்சாளனை எப்படி அடையாளம் காண்பது..?

ஒரு நல்ல பேச்சாளனுக்கு அடையாளம் மூன்று விசயங்கள்...

மகிழ்ச்சி
நெகிழ்ச்சி
எழுச்சி

சிறந்த ஒரு பேச்சாளின் பேசசைக்கேட்க எப்போதுமே மகிழ்ச்சியோடு மக்கள் காத்திருப்பார்கள். ' எப்போது பேசுவார் ? எப்போது பேசுவார் ? ' என்கிற ஆர்வமே அவர்களை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும்.."அவர் பேசமாட்டாரா? " என்பதுபோய் " ஐய்யோ!அவரா பேசப்போறார்? " என்று நினைத்தால் போச்சு...

பேச்சைக்கேட்க,கேட்க மக்கள் மனதிலே ஒரு நெகழ்ச்சி ஏற்பட வேண்டும். கல்லாய் போன இதயத்தில் கூட ஈரம் கசிகிறமாதிரி உணர்வுப்பூர்வமாக பேச்சு அமையவேண்டும். புள்ளிவிவரங்களை விட,மக்களின் உள்ளங்களை கொள்ளையடிப்பது நெகிழ்ச்சியான பேச்சே...

மூன்றாவதாகவும் இறுதியாகவும் கவனிக்க வேண்டியது நம்முடைய பேச்சு மக்கள் அரங்கத்திலே ஒரு எழுச்சியை உருவாக்கி இருக்கிறதா, மக்களின் ஒட்டுமொத்த கவனமும் நம்மீதே குவிகிற வண்ணம் பேச்சில் ஒரு வீச்சு உளளதா என்பது மிக முக்கியம். என்ன காரணத்திற்காக நம் பேசினோமோ அதன் தாக்கமே மக்கள் மனதில் உருவாகும் எழுச்சி..

பேச்சில் தனி முத்திரை பதித்த பேரறிஞர் அண்ணா ஒரு நல்ல பேச்சாளனின் இலக்கணமாய் சொன்னது இந்த மூனறு அடித்தளங்களையே.... !!!

- வாழும் விவேகானந்தர் கிருஷ்ணராஜ வானவராயரின் திருப்பூர் நகர தொழிற்சபை துவக்க நிகழ்ச்சியில் , அவர் பேசியதில் நான் ரசித்தது..

எழுதியவர் : முருகானந்தன் (8-Jul-14, 12:34 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 177

மேலே