ஒருநாள் மழையில்

அடித்துபெய்த மழையில்,
தாகம் தனிந்த மண்,
உழவா...
உழ வா என்றது;
பழையதை அழித்துவிட்டு
புதிய காலடி தடத்தை
பதிவு செய்துகொண்டது,
ஈர மண்;
வெகுநாளைக்குப் பிறகு
குளித்த மகிழ்ச்சியில்
பூக்கள் சொறிந்தன,
சாலையோர மரங்கள்;
பூக்குவளை நிரம்பியதில்
தேனா, மழைத்துளியாயென
குழம்பி நின்றன,
சோலை தும்பிகள்;
அழுக்கையெல்லாம்
அடித்து கழுவி
சுத்தமானது ஊர் மொத்தமும்,
ஒரே நாள் மழையில்;