மழை தேடல்

இருப்பதற்கு
இடம் தேடியது
மழை
சேர்த்து வைப்பதற்கு
மழை
தேடியது நாம்..................!!!
சாத்திர மொழிகள்
சொல்லி பாத்திரங்கள்
திறந்து வைத்தோம் -
உன்னை பத்திரமாய்
அடைத்துவைக்க.... -
நான்
சூத்திரங்களில் அடங்குவதில்லை -
உங்கள்
பாத்திரங்களிலும் அடங்குவதில்லை
என்று சிரித்து
ஏரிக்கு அப்பால் போனது
மழை
ஏழையின் வீ ட்டை நிறைப்பதற்காக..........!!!!
கவிதாயினி நிலாபாரதி