உண்மையும் உலகும்

உண்மையும் உலகும்

நம்மை நாமே ஏமாற்றும் நல்லவன் வேஷம்
நம்பிக்கை மோசம்! நயவஞ்சகம்!

நாடறிந்த உண்மைகளே நாட்டுக்கு நாடு மாறும் என்றால்
நல்ல விசயங்களில் ஏன் வியாக்கியானம்! விவாதம்!

இளமை ஊஞ்சலில் உல்லாசம் காணாத
இத்துப்போன கர்மாக்களின்
உலக வாழ்க்கை உபதேசம்! உபந்யாசம்!

உடல் வருந்தா!
உளம் வருந்தா!
உடன் வருந்தா!
எளிமையை உண்மையாய் ஏற்போம்! உலகத்தை உவந்திடுவோம்!

எழுதியவர் : கானல் நீர் (9-Jul-14, 6:04 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : UNMAIYUM ulakum
பார்வை : 84

மேலே