வாழ்க்கை கல்வி
எண்பது எடுத்தால் நூறுக்கு,
நீ அறிவில் சிறந்தவன் வகுப்புக்கு
தொன்பது எடுத்தால் நூறுக்கு,
நீ அறிவில் சிறந்தவன் அந்த பள்ளிக்கு
நூற்றுக்கு, நூறு எடுத்தால்
நீ சிறந்திடுவாய் அந்த ஊருக்கு,
உந்தன் பெயரும் போயிடும் அந்த
நாளின் செய்திக்கு
இது எல்லாம் ஏட்டு படிப்புக்கு
வாழ்க்கை கல்விக்கு வேண்டியது
நூற்றுக்கு, எண்பதோ, தொன்பதோ,
நூறோ அல்ல,
கொஞ்சம் பகுத்தறிவும்,
கொஞ்சம் பொது அறிவும்,
அதனுடன் நாட்டின் நிலை அறியனும்
நன்மை, தீமை தெரியனும்,
வாழ்வை அலச தெரியனும், நடப்பை
ஆராய தெரியனும், நட்பை அணுகிட தெரியனும்
அன்பு புரியனும், பண்பு இருக்கனும், பணிவு கூட
வரனும், பக்குவமும் நிறைந்திட வேணும்
இதனுடன் கொஞ்சம் படிப்பறிவும்
சேர்ந்தால், அது உன்னை உயர்த்திடும்
வாழ்வின் உச்சத்திற்கு,
நீ சிறப்பாய் வாழ்வதற்கு....