கிராமத்து நஅன்பனுக்கு 2

உன் அம்மாவும் என் அம்மாவும்
நம்மை அழைத்து கிண்டு விட்ட
அந்த ஓட்டு பள்ளி கூடத்தில்
தான் நம் நட்பு ஆரம்பமானது

இலந்தை பலம் பறிக்க
வீட்டுக்கு தெரியாமல்
சென்று அம்மாவிடம் அடிவாங்கி
அடுத்த தடவை நான் வர மறுத்த போது
மறக்காமல் நீ கொண்டுவந்து
தருகிற அந்த இலந்தை பழம்

மழை வரும் போது எல்லாம்
துள்ளல் ஒரு பக்கம்
மறுபக்கம் நம் ஒழுகும்
ஓட்டை வீட்டை நினைத்து
கவலை இருந்தாலும்
மழை துளியோடு போடுகிற ஆட்டம்
அதுவும் நிறுத்தாமல் நம்மோடு
போட்ட ஆட்டம்

நீயும் நானும்
கம்மா கரையிலும்
காட்டிலும் ரசித்த
விலங்குகளையும் பறவையும்
நம் பிள்ளைகள்
வீட்டுக்குள் உட்கார்ந்து பார்ப்பது
பாவம் போல் தோன்றுகிறது

எழுதியவர் : தமிழ் gomathy (14-Mar-11, 8:17 pm)
சேர்த்தது : sarah geneema
பார்வை : 326

மேலே