கண் விழித்து கவிதை

*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (11-Jul-14, 3:43 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 221

மேலே