ஆசீர்வாதம்

ஆகமவிதி
அலங்காரங்களுக்காய்
கருவறை
சாத்திக்கொண்டார்
கடவுள்...!!
எச்சிலொழுக
விரல்சூப்பிச் சிரித்து
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது
குழந்தை.....!!!

எழுதியவர் : நல்லை.சரவணா (12-Jul-14, 8:35 pm)
பார்வை : 474

மேலே