அடி கள்ளி!

நான் பேச வந்தபோது
நீ மௌன வேஷம் போட்டாய்

நான் மௌனமானபோது
வார்த்தைகளை வீசி செல்கிறாய்!

எத்தனை முறை
உன் தரிசனம் காண
நான் தவித்திருக்கிறேன்
தெரியுமா உனக்கு!

உன் வீட்டு
கதவுகளை பார்
என் ஏக்க பார்வைகள் தாக்கியே
தேய்ந்துபோயிருக்கும் அவை!

என் முகம் கூட
மறந்துபோனது உனக்கு!
இத்தனை வருடங்கள்
கழிந்த பிறகும்
உன் முதல் பார்வை
நினைவிருக்கிறது எனக்கு!





எழுதியவர் : அருள் Roancali (15-Mar-11, 3:38 pm)
சேர்த்தது : Arul Roncalli
பார்வை : 416

மேலே