+கற்றவை பற்றவை+

சுற்றிலும் நிலவிடும்
சூழ்நிலை சரியில்லை

முற்றிலும் மனதாலே
முன்னேற வழியில்லை

கற்றவை மதிப்பெண்ணை
பெருக்கிட மாத்திரம்

பட்டமாய் முன்னேற‌
இல்லையோர் சூத்திரம்

திட்டங்கள் தீட்டியும்
தீமையே முன்னிலே

கட்டிய கட்டிடம்
அதனாலே மண்ணிலே

இளமைக்கு அறிவூட்ட
சான்றோர்கள் இல்லையோ

வளமைக்கு வலுவூட்ட‌
ஆன்றோர்கள் எங்கேயோ

நிலையில்லா உலகிலே
தப்புகள் நிலைக்குதே

வலையிலே மாட்டியும்
வழக்குகள் இழுக்குதே

இதையுமே மாற்றாமல்
இருந்தென்ன பயனிங்கே

சதையுமே வளர்க்காமல்
சமுதாயம் வளர்ப்போமே

கற்றவை யாவையும்
கருத்தோடு பகிர்வோமே

பற்றவை த்திடுவோமே
பாவங்கள் அனைத்தையும்

முன்னேற்றம் ஒன்றையே
கனவாக காணுவோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Jul-14, 7:12 pm)
பார்வை : 222

மேலே