மூச்சும் பேச்சும்
மூச்சும் பேச்சும்
************************
மூச்சும் பேச்சும் தமிழ் என்று வாழ்ந்ததால் - இன்று
தமிழன் தரம் கேட்டு போய்விட்டானா ? - உலகம்
கேட்கும் கேள்வி இது - உண்மையை யார் அறிவார் ....?
மூச்சும் பேச்சும் தமிழாய் கொண்டதால் - இன்று
தமிழன் பேச்சிழந்து பிணமாய் கிடக்கிறான் - தமிழ்
பேசியதால் வயிற்றிக்கு சோறின்றி தவிக்கிறான்
மழலைக்கு பாலூட்ட மார்திறந்த தமிழச்சியின்
முலையறுத்து மான பங்கப் படுத்தினார்கள் - அவளை
இரண்டாய் கிழித்து மண்ணில் நாற்றாய் நட்டார்கள்...!
திரை கடல் ஓடி திரவியம் தேடியவனை இன்று
அலை கடலிலே விரட்டி விரட்டி அடிக்கின்றனர்
தமிழ் வேரில் வென்னீ ரை ஊற்றி - தமிழனை
கண்ணீர்க் கடலில் தவிக்க விட்டனர் ....!
தமிழா ....! தமிழா ....!
மொழியைப் பேசி முதுகு சொரிந்து கொண்டு -அரசியல்
சாக்கடைகளை தமிழ் மொழிக்கு பூசி அழுக்காக்கி
ஜாதிப் போர்வைக்குள் நத்தையாய் சுருண்டுக் கொண்டு
நரகலை நக்கி தின்னும் நாய்களாய் வளம் வருவோரை
இனம் கண்டு விரட்டிடுவோம் ...........................................!
கோமாவில் கிடக்கும் தமிழ் மொழிக்கு உணர்வால்
உட்டச் சத்து பாய்ச்சிடுவோம் - நம் தமிழ் மொழிக்கு
சல்லி வேர்களாய் இருந்து சலித்துப் போகாமல்
அசைக்க முடியாத ஆணி வேர்களாய் இருப்போம் ..!
மண்ணின் மானத்தை காப்பவன் மரத் தமிழன் அல்லவா ...?
தமிழர்களே ...! தமிழர்களே ...! தமிழால் ஓன்று படுங்கள் ..!