விதவையின் குமுறல்

விதவையின் குமுறல்..
கைப்பிடித்த
கணவன்
கைக்குழந்தையை விட்டுவிட்டு
காலனோடு சென்றுவிட்டான்
சமுதாயமெனும்
சரணாலயத்தில்
வசைபாடலுக்கு மத்தியில்
வதைபடும் பிறவியாய்
வாழ்கிறேன்..

இரவுகள் கூடும்போதெல்லாம்
இமைக்க மறுக்கும் கண்கள்
இதயம் துடிக்கிறது
இவ்வாழ்க்கையை நினைத்து ..

தொட்டிலில் வைத்து பிள்ளையை
தாலாட்டும்போதேல்லாம்
தொட்டு தாலிக் கட்டியவனை நினைத்து
தினமும் அழுகிறேன் ..

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாய்
என்னுடன் கரைகிறது
ஏக்கத்துடன் ...

தவளைகளின் சத்தத்தில் தினம்
தத்தளிக்கிறது என் மனம்
மஞ்சமெங்கும்
மயானத்தின் நிசப்தம்
மனதுக்குள் வந்து போகிறது
மணாளனின் பிரிவை எண்ணி.
.
வானம் பார்த்த பூமியாய்
வசந்தம் வருமென்று காத்திருந்து
வறண்ட பாலையாய் கண்களில்
திரண்டு வரும் கண்ணீரோடு
தினம் வாழ்கிறேன்..

எழுதியவர் : தஞ்சை கவிஞர் செல்வா (15-Jul-14, 7:31 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 107

மேலே