மீசை மீசை கவிதை

*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (17-Jul-14, 9:43 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 657

மேலே