கடைசிப் பக்க கிறுக்கல்கள்

என்
கல்லூரி பாடப்புத்தகத்தின்
கடைசிப்பக்க கிறுக்கல்களும்
கவிதை ஆனது..
இடையிடையே உன் பெயர்
இருந்ததால்..

என்
கிறுக்கல்களின் கருப்பொருளாய்
நீ இருந்ததால்
கிறுக்கிய கோடுகளும்
புள்ளிகளும் வளைவுகளும்
உன் முகமாய் தெரியுது..

உன் பெயர் எழுதியதை
என் நண்பன் பார்த்துவிட
அதை மறைக்க நான்
கிறுக்கிய கிறுக்கல்களுக்கு
பின்னால் நீ
மறைந்திருந்து பார்க்கும்
மர்மம் உணர்ந்தேன்...

உன் கண்கள் பட்ட
என் பார்வைகளால்
நெளிந்து நான் எழுதிய
கவிதைகளின் சுவை
புற, அக நானூறுகளிலும்
இல்லை..

என் கவிதைகளில் உள்ள
அடித்தல் திருத்தல்கள் யாவும்
எழுதும் போது தொந்தரவு செய்த
உன் முக பிம்பங்களால் தான்
என்பது எத்தனை பேருக்கு
தெரியுமோ...

ஆனால்
அந்த தொந்தரவுக்கு பின்னால்
நான் எழுதிய கவிதைகளில் தான்
அத்தனை அழகு என்பது
எனக்கு மட்டுமே தெரியும்...

காலங்கள் கடந்தாலும்
காட்சிகள் மாறினாலும்
காதலாகி கசிந்துருகிய நாட்கள்
கண் முன்னே தெரிகிறது
என் கடைசிப்பக்க கிறுக்கல்களை
காணும் போது....

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (17-Jul-14, 10:02 am)
பார்வை : 159

மேலே