யுத்தம்

வானம் தெரியுது
குண்டு விழுந்த கூரையில்
வீடிருக்கு; வசிக்க இயலாது

மாறிமாறி அடிக்குது
வெந்த கறி வாடையும்
ரத்த வாடையும் காற்றில்,
தெருவிருக்கு; நடக்க இயலாது

ஓடிக்கொண்டே இருக்கிறோம்
பிய்ந்த கைகளோடு தம்பியும்
இழந்த காலோடு நானும்
எங்களுக்கான எறிகுண்டு
விழும் வரை….

எழுதியவர் : பசப்பி (17-Jul-14, 10:30 am)
சேர்த்தது : பசப்பி
Tanglish : yutham
பார்வை : 83

மேலே