மயக்கம்
உன்னைக் கடக்கும்போதெல்லாம்
நிலம் பார்க்கும் விழிகள்
நிமிர்ந்துப்பார்க்க துணிவதில்லை
உன் நினைவுகள் இதயத்தை
ஸ்பரிசிக்கும் நொடிகளில்
புதிதாய் ஒரு முன்னோட்டம்
வார்த்தைகள் பிந்துகிறதா? இல்லை
என்னை முந்துகிறதா..
வார்த்தைகள் வராமல்
வதம் செய்யும்போதெல்லாம்
வரவழைத்து விடுகிறேன்
மௌனத்தை தவம்செய்து .....
உன்னை காணாத பொழுதுகளில்
உளறிக்கொட்டும்
வார்த்தைகளை எல்லாம்
உறிகட்டிய நெய்ப்பானையாய்
நெஞ்சுக்குள் வைத்திருக்கிறேன் ......
என்னில் மூழ்கி
என்னை மிதக்கவைக்கும்
நினைவலையே
எப்போது
என்னை உன்னில்
மூழ்கவைக்க போகிறாய்?
காத்திருக்கிறேன்
காதலை வேண்டியே
கலங்கரை விளக்காய்
உன் காலடியில் ......!!!
கவிதாயினி நிலாபாரதி