கடற்கரை காதல் ஜோடி கிளிஞ்சல்கள் 555

உயிரானவளே...

மாலைநேர கடற்கரையில்
ஆங்கங்கே மக்கள் கூட்டம்...

சிறுவர்களின்
விளையாட்டு...

மணற்பரப்பில் பெயர் எழுதி
காதல் என்னும் பெயர் வைத்து...

ஒதுங்கி நிற்கும் படகு
ஓரங்களிலும்...

குடைகளுக்குள்ளும் தங்களை
மறைத்து கொண்டு...

இதழ்களும் உடல்களும்
இறுக்கி கிடக்கும்...

பல ஜோடிகளுக்கு
நடுவில்...

சின்ன பிள்ளைகளை
போல ஓடியோடி...

சேகரித்து கொண்டு
இருக்கிறேன் கிளிஞ்சல்களை...

வீட்டிற்கு எடுத்து செல்ல
முடியாதென தெரிந்தும்...

சிறு பிள்ளையாக
விளையாடும் என்னை...

தனியே தொலைவில் அமர்ந்து
ரசித்து கொண்டு இருக்கும் உன்னை...

உன் காதலின்
ஆழத்தினை...

என் காதலின் நீளதோடுதானே
ஒப்பிட முடியும்...

நீயும் நானும் சேர்ந்து விளையாட
காத்திருகிறேனடி நான்...

கோபம் கொண்டு மெளனமாக
இருகிறாயடி நீ...

அலைகளையும் ரசிக்கிறாய்
என்னையும் ரசிக்கிறாய்...

மௌனம் கலைத்துவிடடி
என் கண்மணியே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Jul-14, 1:59 pm)
பார்வை : 173

மேலே