குழந்தைகள் உலகம்-1

''உலகமயமாக்கம்'' எங்கு தொடங்கியது,
என்று கண்டு கொண்டேன்!
ஒவ்வொரு முறையும் என் பெண்ணிற்கு,
நான் கதை சொல்கையில் !
"ஒரு ஊரில்,ஒரு ராஜா...."

என் கதைகளை முடிக்கும் உரிமம்,
என்றுமே அவள்,எனக்கு கொடுத்ததில்லை!
என் கதைகளை அவள் உறக்கத்துனுள்
மட்டுமே முடித்துக் கொள்வதால்!

ஒவ்வொரு முறையும் குழந்தைகள்
விடும் அட்டை கப்பல் சரிந்தே விழுகின்றன!
அவர்கள் கன்னம் பதித்த விரல்களை
காண்பதற்காகவே!

நான் வாங்கித் தந்த எல்லா பொம்மைகளும்,
தன் பேச்சினை நிறுத்திக்கொண்டன-என் மகளிடம்!
அவள் புதிதாய் பார்க்க தொடங்கி இருக்கும்,
கார்ட்டூன்களை எதிர்த்து!

--எந்த புலவரும் தோற்றே நிற்பர்,
குழந்தையின் கற்பனை முன்னால்!

எழுதியவர் : பாரி (19-Jul-14, 3:41 pm)
பார்வை : 66

மேலே