சொர்க்க வாசல்
வெள்ளரி விதையின் பற்கள்
=வெளித்தெரி கின்ற வாறு
உள்ளமே மலர்ந்த தைப்போல்
=உவகையைக் காட்டி நின்றாள்;
புள்ளிமான் முன்னே வந்த
=புலியென அப்பா வந்தார்;
துள்ளியே மறைந்தாள்; மேகத்
=திரையென்ச் சன்னல் மூடி!
என்னுள்,உன் நினைப்போ காலை
=இளம்பனி போல நிற்கும்!
முன்னுமே பிரிவு தோன்றி
=மூத்திடும் கதிரோன் போல
என்னுளே வெப்பம் கூட்டும்;
=எனக்குளே தாகம் கூடும்!
என்று,இனி சொர்க்க வாசல்
=எனக்கெனத் திறக்கப் போமோ?
======= ======