நம்பிக்கை

நம்பிக் கை வைக்கிறார்கள்
நான் நம்பியதால்
என் நம்பிக்கை மீது !

என்ன செய்வது ?
கைகட்டி வேடிக்கை
பார்ப்பதைத் தவிர !

வலித்திருக்கும் காயம்
ஆறும்வரை
என் கை இழந்திருந்தால் !

வலிக்குமே காலம்
முழுவதும்
நான் இழந்தது !

கணப் பொழுதில்
கண்ணியம் தொலைத்த மனிதன்
தொலைத்துவிட்டான் என்னையும் !

சகோதரனாக நான் நினைத்தவன்
கரை படுத்திவிட்டான்
என் நாணயத்தை !

கண்ணன் வரவில்லையே
என் கலங்கத்தை துடைக்க
நான் திரௌபதி இல்லையே !

நல்ல வேலை !
என் கர்ணன் இருந்தான்
இந்த துரியோதனனுக்காக !

துரோகம் எனைத் துவள வைத்தபோது
எனைத் தூக்கி நிறுத்தியவன்
கர்ணன் மட்டுமல்ல
என் அண்ணனும்கூட !

நம்புங்கள் நண்பர்களே
நம்பிக்கை துரோகிகளை
உங்களோடும் ஒருவன் இருந்தால்
எம் கர்ணனைப்போல் !

எழுதியவர் : முகில் (21-Jul-14, 10:57 pm)
Tanglish : nambikkai
பார்வை : 680

மேலே