நட்பு தந்த நல்ல படிப்பினை

தேகம் முழுவதும்
தீயாக பரவியது
- சந்தேகம் !
சந்தேகம் ! யார் மீது ?
எளிதில் எல்லோரையும் நம்பியதால்,
விடையறியா வினா ஆனது !
உடைந்து சிதறிப் போனேன் !
உண்மையை உணர்ந்த பொழுதில் !
கள்வன் என் நண்பர் !
கலங்கம் என் நட்புக்கு !!
தா ! எனக் கேட்டிருந்தால்,
தந்திருப்பேன் என் உயிரையும் !
நான் சிற்பமாக செதுக்கிய நட்பு !
அற்பமாக அழிந்து போனது !
நம்ப முடியாத மாற்றம் !
நண்பர் தரும் ஏமாற்றம் !!!
எரியும் உள்ளத்தை தணிக்கும்,
மழைமுகிலாக மற்றொரு நண்பன் !
நட்பு உள்ளவரை நல்ல,
நண்பனுக்கு அழிவே இல்லை !
கலியுக கர்ணன் ! எனக்கும்
இனி அழிவே இல்லை !!