காலை வந்தது
காலை வந்தது கடும் உழைப்பை தந்தது !
------------------------------------
கதிரவன் தன் கதிவீச்சை மறைத்து கொண்டு
கார்மேகத்தில் காணாமல் போய்விடுகின்றான் !
நீ போனால் யென்ன நிலவு நானிருக்கிறேன்
என்றாலும்
இருளை மறைக்க நிலவால் யியலவில்லை 1
இதமான ஒளியை மட்டும்
இயன்றவரை தருவதால்
காக்கை குருவி மனிதன் என
கள்ளனை தவிற
அனைவரும் துயில் கொள்கின்றோம்
துயர் மறக்கின்றோம் தூக்கத்தில் !
கண் விழித்து கண்விழித்து
கலைத்து போன வெண்னிலா
காலையில் கதிரவனை
தட்டி எழுப்பி
மனிதர்கள் விழிக்கட்டும் !
மா பலா போன்ற மரங்கள்
அசையட்டும் !
பூக்களை சிந்தும் கொடிகள்
புண்ணகைகட்டும்
போ விடியலை கொடு என்றது !
காலை வந்தது !
கடும் உழைப்புக்கு
தயாராகிறான் மனிதன்