உண்டென்பது - இல்லையென்றால்
அன்பு என்பதும்
சிறையென்று
அறியவைத்தவன் நீ!
என் சிறகுகள்
உடைந்து உன்னில்
அடைபட்டு விட்டேன்!
நீ மௌனம் ஏற்ற
நாட்களில்
உனக்கும் எனக்குமென
நானே
பேசித்தீர்த்தேன்.....
கற்பனையில் களித்தேன்
என் பொழுதுகளை உன்னோடு!
நினைவுத் தூரிகையால்
வரையப்பட்ட
நிழற்படம் நீ!
நிஜங்களைக் காணும்
நிமிடங்களை எண்ணி
பார்வை பதித்தேன்-உன்
பாதம் வரும் வழியில்!
கனவா , நினைவா- நீ என்னைக்
கடக்கும் பொழுதுகள்!
கண்களைக் கசக்கி
காண்கின்ற போது
கானலாய் வந்து நீ
காணாமல் போவதென்ன?
உன்னிலும் உருவாச்சா? -ஏதேனும்
உணர்வுகள் என்னைப்பற்றி!
உனக்கும் வந்து போனதா வலிகள்? நமக்குள்
இயன்றவரை
இடைவெளிகள்
வந்த போது!