ஒற்றையடி பாதையில் உனக்காக நான் 555

பெண்ணே...

என்னை காகிதமாக
நினைத்து...

நீ தூக்கி எறிந்த போதுதான்
தெரிந்தது எனக்கு...

நீ எழுதுகோல் என்று...

மழையில் நனையும் போது கூட
நான் ஒதுங்கி நின்றதில்லை...

உன்னை பார்பதற்காக
தினம் தினம் சாலையோரம்...

நான் ஒதுங்கி
நிற்கிறேன்...

பார்போர்களுக்கு வேடிக்கைதான்
உன் தோழிகளுக்கும்...

என் மீது இறக்கமில்லாத
உன்னால்...

உறக்கமில்லாமல் போனது
என் இரவுகள் ஒவ்வொன்றும்...

உன் கிராமத்திற்கு
நடந்து நடந்து...

நான் போட்ட புது
ஒற்றையடி பாதையில்...

எப்போது வருவாய்
எனக்கு துணையாக...

உன் கைகளில் மருதாணியை
வைத்து கொண்டு...

பிடித்திருக்கா என்கிறாயே...

என் மனதில் உன்னை
வைத்திருக்கும் என்னை...

பிடித்திருக்கா உனக்கு எத்தனை
முறை கேட்டிருப்பேன்...

ஒருமுறை சொல்வாயா
பிடித்திருக்கு என்று...

காத்திருக்கிறேன் ஒற்றையடி
பாதையில்...

உனக்கா நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Jul-14, 6:12 pm)
பார்வை : 204

மேலே