அடியே என் அகலிகை

முன்பெல்லாம் முத்தத்தால் நனைந்த என் தலையணை….
இப்போதோ கண்ணீரால் நனைகிறது...
ஆருயிரே உனக்கு நானும்
ஆறாம் விரல் ஆனது எப்போது!!!

பச்சிளம் குழந்தை பசியால் அழுதிட
மார்சுறக்க மறுத்து நஞ்சு ஊட்டினாயே!!! உன்னை எப்படி பெண்மை
இன்னும் தன்னுள் பதுக்கிவைத்திருக்கிறது...
இன்றோடு அது உன்னை பிதுக்கி எறியட்டும்...!!!

அழகிய ஆயுதங்கள் ஆயிரமாயிரமிருக்க
நம்பிக்கை எனும் ஆயுதம் ஏன் ஏந்தினாய்...!!!

நீ அடுக்கிய பொய்களுக்குப்பதில்
என் சவத்தின்மீது விறகு அடுக்கியிருந்தால்கூட
என்னை இவ்வளவு சுட்டு இருக்காது..!!!

மிருங்களால் கண்ணோடு கண்பொருந்த ….
கலவி கொள்ளயியலாத காரணம் தெரியுமா உனக்கு...
கண்ணோக்கி கலந்தால் காதலும் கலந்து
மிருகம் மனிதனாகிவிடும்
உயிரை பறிக்கும் எண்ணம் ஓடிவிடும் என்பதால்
இப்போது சொல்லடி எப்போது நீ மிருகமானாய் ...

பத்தாண்டு பழகியும் கண்ணியம் காத்தேனே...
என்னை கௌதமர் வகையில் நிற்கவைத்தாயே

அடியே என் அகலிகையே !!!
உன்னக்கு நான் இடும் சாபம் இதோ கல்லாக மாற அல்ல….
நீயும் யாரையேனும் உண்மையாக காதலிக்கக் கடவாய்...

விமோசனமா??? அதுவும் தருகிறேன்!!!
இன்று இறந்த என் காதலுக்கு, என்றேனும்
கண்ணீர் கசிப்பாயானால் அதில் கரையும்
உன் பாவமல்ல என் சாபம்

.....வஸந்த் மதியழகன்....

எழுதியவர் : வசந்த் மதியழகன் (26-Jul-14, 11:34 am)
Tanglish : adiye en agaligai
பார்வை : 174

மேலே