யார் பணக்காரன்

யாரென்றே அவனுக்கு
தெரியாத பேர்களும்
அவன்பற்றி எதையோ
எங்கும் பேசுவர்....
அவன் உழைப்பு
மறக்கப்படும்...
கஷ்டங்கள்,கண்ணீர்கள்
காலத்தால் அழிக்கப்படும்....
கொடுத்து வைத்தவன் ,
அதிர்ஷ்டக்காரன் ,
எடுத்து செய்ததில்
எல்லாம் வெற்றி-என்ற
பொய்யான புரளி
அவனுக்கு தெரியும்....

தனிமை விரும்பினால்
தலைக்கனம் பிடித்தவன்!
கூட்டம் கூட்டினால்
'குறிக்கோள்' உடையவன் !...
வழங்க முன்வந்தால்
வள்ளல்தனம் காட்டுகிறான்...
வாளா இருந்தாலோ
வடிகட்டிய கஞ்சன்!...

தாராளமாய் வாழ்ந்தால்
பணத்திமிர் பிடித்தவன்...
எளிமையாய் இருந்தாலோ
ஏழை வேசம் போடுகிறான்!!!...
அவரவர் கணிப்புகள்
அவனுக்கே தெரியாது!!!

அவனை விமர்சிக்கும்
மத நிறுவனங்கள்
நன்கொடை என்றதும்
நாடுவதும் அவனைத்தான்...
கடவுள் காரியங்கள்-அவன்
காசினால் நடைபெறும்...
காரியம் முடிந்ததும்-அவன்
கடவுளின் எதிரி!!!

உண்மையில்....
அவன் ஆசீர்வதிக்கப் பட்டவன்
இவர்கள் சபிக்கப் பட்டவர்கள்...
சாபத்தை சகித்து கொண்டதால்
இவர்கள் சாமான்யர்கள் !
சண்டைபோட்டதால்
அவன் பணக்காரன்!!
அவ்வளவுதான் ....

எழுதியவர் : அபி மலேசியா (27-Jul-14, 3:32 am)
பார்வை : 636

மேலே