எங்கே இருக்கிறாள் எனக்கென்றவள்
என்னை அறியாதவள்..
எனக்கு தெரியாதவள்...
அவள்..!
விழித்தெழுந்த நாழி முதல்..
என்னைப்பற்றியே அவள் எண்ணம்
எனக்கு தெரியாமலே!
என்னைச் சுற்றி வரவேண்டும்..
என் அறிமுகம் இல்லாத முன்பே..!
என்னை வருடும் தென்றலாய்..
என் வானத்தில்..
எட்டாவது அதிசயம் அவள் !
தெருக்கோடி வாசகம் ...
உனக்கானவள் பிறந்திருப்பாள்
நீ தேடிகொள் என்றது...!
நான் தேடிப்போகிறவள்
என்னைத்தேட வேண்டும்...!
இறைவன்..
எனக்காக எழுதிய கவிதையில்
அவள்தான் முற்றுபுள்ளி .
எங்கே இருக்கிறாள் ?
எனக்கென்றவள்...