பள்ளிக்கூட தோழிகள்......................

பள்ளிக்கூட
கோலப்போட்டியில்
நீ கோலம் போட்ட போது
நிச்சயம் உனக்குத்தான் பரிசு
கிடைக்கும் என்று உன்னை
உற்ச்சாக படுத்தினேன்
பரிசும் கிடைத்தது ஆனால்
ஆறுதல் பரிசாக
வகுப்பறை தோழிகளோடு
தொலைந்து போன பென்சிலுக்காக
சண்டை போட்டாய்
என் பென்சிலை
கொடுத்து உன்னை
சமாதானம் செய்தேன்
மயில் இறகுகளையும்
ஸ்டிக்கர் பொட்டுகளையும்
உன் பாட புத்தகத்தில்
சேமித்து வைத்திருப்பாய்
எதற்கு என்று கேட்டால்
இவைகள் பாட புத்தகத்தில் வைத்தால்
நன்றாக படிப்பு வரும் என்று
பாட்டி சொன்னதாக சொல்வாய்
ஆசிரியர் கேட்க்கும்
கேள்விகளுக்கு விடை தெரியாமல்
அடி வாங்கி கொண்டு
தேம்பி தேம்பி அழுவாய்
அப்போதெல்லாம் உன்
கண்ணீரை துடைத்து
உனக்கு ஆறுதல் சொன்னேன்
உன் ரப் நோட்டில்
நம் தோழிகளின் பெயர் ,அவர்கள்
முகவரி .பிறந்த தேதி களையும்
எழுதி வைத்திருப்பாய்
எதற்கு என்று கேட்டால்
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
வாழ்த்துவதற்கு என்றாய்
வகுப்பறையில்
நம் தோழிகளுக்கு யாராவது
ஒருவருக்கு உடல் நிலை பாதித்தாலும்
கூடவே இருந்து கவனித்தோம்
அவளுக்காக பள்ளிகூடத்தில்
பிரார்த்தனையும்
செய்தோம்
குரூப் ஸ்டடியில் படிக்கும் போது
சில பாடங்கள் புரியாவிட்டால்
அழுது புலம்புவாய்
அப்பொழுதெல்லாம்
உன்னை தேற்றி உனக்கு
புரிய வைத்தோம்
பரிட்சை எழுத்தும் போதெல்லாம்
பரிட்சை முடிந்ததும் நான் அது நன்றாக
எழுதினேன் இது சரியாவே புரியல
ஆனாலும் உலத்தி விட்டேன்
எப்படியும் மார்க் கிடைக்கும்
என்று கூட்டாக நின்று கேள்வி தாழ்களை
பார்த்து பேசிக்கொள்வோம்
பள்ளியின் இறுதி நாளில்
அவரவர் இருக்கையில் அமர்ந்து
தேம்பி தேம்பி அழுதோம்
இனி நாம் எப்போது சந்திப்போம்
நீ என் செல்லமடி என்று ஒருவருக்கொருவர்
முத்தமிட்டுக்கொண்டும் கட்டி
பிடித்துக்கொண்டும் முகவரிகளை
பகிர்ந்துக்கொண்டும்
கண்ணீரோடு பிரிந்து சென்றோம்
தோழியே இப்போது
நாம் பகிர்ந்துக்கொண்ட முகவரியில்
யாருமே இல்லை காலத்தின் வேகத்தால்
நம் நட்பும் நம் முகவரிகளும் எங்கோ
தொலைந்து போனாலும்
நாம் இன்றும் வாழ்கிறோம்
பள்ளிக்கூட தோழிகளாக
இப்படிக்கு......கனவில் பள்ளிக்கூட தோழியாக நானும்