மதம்
ஆயிரம் மதங்கள் படைத்து
ஆயிரம் பூசைனைகள் செய்து
பெரிதா சிறிதா கடிதா
என்ற விளக்கம் ஏன்
என் மதம் தான் உலகில்
பெரிகிட வேண்டும்மென்ற நோக்கம் ஏன்
மதத்தை மதத்திடம் விட்டு விடுங்கள்
வீட்டில் வைத்திடுங்கள்
வெளியில் அழைத்து வராதீர்
காற்று பெரிதா மழை பெரிதா வெயில் பெரிதா
என்று எவ்வாறு அளக்க முடியும்
மதத்தைவிட மனிதன் பெரியவன்
மனித நேயம் பெரிது
புரிந்து கொள் மனமே
மதத்தால் மதத்தில் ஏறி
அறிவு இழந்திட வேண்டாம்
பிறர்காக வாழ்வதே பெரிய மதம்
பரமபதம் அடைகின்ற பதம்