திறந்த கதவில் டிராகுல்லாவின் இரவு
திறந்த
கதவின் வழியே
முதன் முறையாக
ஒரு
ஜன்னல் வந்தது....
அது திறக்க முடியாமல்
இருந்தது தான்
கதவின்
ஆசுவாசத் திரை
விலகியதன்
தீவிரம்...
முரண்பாட்டு மூட்டைகளின்
உடன்பட்ட
கோட்டைகளென
இரண்டு கோரப் பற்கள்
வெளி வந்த
தருணத்தில்
வெளியே
இரவு நின்றிருந்தது...
இனி.....,
திறந்தே கிடக்கும் கதவு .....
கவிஜி