கேள்வி
சர்மமும் சதையும் காக்க
இரும்பெனும் எலும்புக்குள்
நரம்பெனும் நார் சுற்றி ...
உதிரத்தை நீராய் ஊற்றி
வளர்துவந்தேன் என் இதயமதை...
சாயங்கால வேளையிலே
பார்வையாலே சாகடித்தால்
ஒரு தீ ............
அவளுக்காகக் திறந்து விட்டேன்
என் இதையமதை?
திறந்த கதவை
மூட மறந்து விட்டேன்
மறந்துவிட்ட காரணத்தால்
அவ் வழியே
இன்னொருத்தி நுழைந்து விட்டால்
நுழைந்தவளை வாழ வைக்க
புரியாத புதிராக தவிக்கின்றேன்.,,,,,,,