ஒரு வினாடியைக் கூட வீணாக்காதே
போராட்டமே என்னை ஏற்றுக்கொள்!
நீ மட்டும் தான் என்னை அடிக்கடி நினைவு படுத்துகிறாய்..
காதல் காதல் என்று அலைந்தேன்
கடைசியில் அது என்னை அன்பு வழியை
தேடு என்றது காதலில் அன்பு இல்லையா? என்றேன்
அது கடந்த காலத்தோடு முடிந்து விட்டது என்றது.
என்விழிகள் காலையும் மாலையும்
அவளையே தேடியது என்பதை உணர்ந்தேன்
அது சொன்னது காலையையும் மாலையையும் வீனக்கதே என்று.
காதல் என்பதே மனிதனுக்கு வேண்டாமா? என்றேன்
அதற்கும் அது நீ முதலில் மனிதனாக இரு என்றது
காதலித்து மனையியை தேடலாமே என்றேன்
அதற்க்கு அது மனைவியை காதலியாய் பார் என்றது
ஒரு வினாடியைக் கூட வீணாக்காதே உன் காதலுக்காக
அந்த காதலே கடைசிவரை போராட்டமாக மாறிவிடும்
அதன் பிறகு உன்னை நீ அடையாளம்
செய்து கொள்ளவே முடியாது
நீ வுயிரோடு இருக்கிறாய் என்று.