சந்ததிக்கு சொச்சமும் மிச்சமும்

வெடிக்கும் உயிர்களுக்கு
வெங்காயமாய் உரிகிறது மனிதம்
மனங்களின் குமுறல்களாய்....

வான் கூரையில்
ஓட்டைகளென நிதர்சனமும்
பிரயர்த்தனங்களும்
நிர்கதியாய்........

வெளியெங்கும் குவிந்து
அக்கிரமத்தின்
பராக்கிரமங்கள் உருகுது
பனிமலையாய்.......

சுகதுக்க
வேள்விகளில்
ரத்தம் பிசுபிசுக்கிறது
பணமழையாய்.....

பிழைப்பில்லா
தனிமையில்
வயிறும் வாழ்வும்
வன்மகளமாய்....

ஒழித்தாலும்
ஒளிந்து வகையாடும்
தோண்டி எடுத்தாலும்
அண்டி வாகைசூடும்
ஊழல்களோ
அற்ப சூரன்களாய்....

போவதெங்கே?
போவதெதற்கு?
போய்விடுவாயோ?
பொய்த்துவிடுவாயோ?

இயற்கையதின் நியதி
எல்லாம் அள்ளிக்கொடுப்பது
மனிதனவன் மதி
எல்லாம் அள்ளிக்கெடுப்பது...

மனிதா......நில்!!!

இயல்பை மதிந்து
இருப்பைக் காத்து பிழைத்து
சந்ததிக்கு மிச்சம் வை.
சாவதற்குள் ஆவன உயிர்த்து
சந்ததிக்கு சொச்சம் செய்.

எழுதியவர் : சர்நா (30-Jul-14, 1:27 pm)
பார்வை : 128

மேலே