மனிதாபிமானம்
தெருக்களில் நடந்து சென்றேன்
கால்கள் வலிக்கும் வரை .....
கண்களை திறந்து காத்திருந்தேன்
இரவு பகல் முடிவில்லாமல் ...
வாசித்தேன் புத்தகங்களை
முடிவில்லாமல் விபரமாக ....
கலந்துரயாடல்களில் ஈடுபட்டேன்
நண்பன் நண்பிகளோடு ......
சென்றேன் அரசியல் வாதியோன்றின்
வசதியான மாளிகைக்கு .....
இது எங்கேயும் காணக் கிடைக்கவில்லை
நான் தேடிய மனிதாபிமானம்
இறுதியில் கண்டேன் தெருவில்
திரியும் நாயிடம்.....