அன்புள்ள என் அப்பா வெளிநாடு வேண்டாம்பா

அன்புள்ள என் அப்பா,

டாட்டா கூட சொல்லாமல்
இரவோடு இரவாய் எங்களை விட்டு
விமானத்தில் ஏறி விட்டாய்
காலையில் வந்திடுவேனென்று

மடிக்கணினியில் உன்னை புகுத்தி
அம்மா மடியில் வைத்து
பார்க்க சொல்கிறாள் கண்ணீருடன்
என்னையும் நம் பாப்பாவையும்

உன் வெளிநாட்டு வேலைக்காய்
எங்களை இங்கே தவிக்க விடுகிறாய்
என்றுதான் என் தாத்தா
உன்னை அடிக்கடி திட்டுகிறாறப்பா..

நீ என்னிடம் கொஞ்சியதை
அம்மாவிடம் கெஞ்சி கெஞ்சி
அப்ப அப்ப அடிவாங்கி
கைபேசியில் பார்த்துக் கொள்கிறேன்


நான் விரும்பி சாப்பிடும்
நூடுல்ஸ்ம் பால்கோவாவும் இ்ங்கவுள்ள
அங்கிள்கிட்டயா கேட்க முடியும்
எனக்கு நீயே சொல்லப்பா


பாட்டி சித்தி வாங்கி தந்த
ட்ரஸ் சாக்லேட் ஸ்வீட்டெல்லாம்
நீ வாங்கி கொடுத்தது இல்லையாப்பா..
எனக்கு அப்பவே தெரியுமப்பா..

என் அம்மாவையும் பாப்பாவையுமாச்சும்
நீ கூட்டிட்டு போயிரு்கலாம்பா
அப்ப அப்ப அழுகிறப்ப அவங்க கையில்
உன்னோட புகைப்படம் தானப்பா..

தினமும் என்னிடம் போனில் பேசினாலும்
என் ப்ரண்டஸ்ங்க நீ இல்லன்றாங்கப்பா..
உன் அம்மா என்ன பார்க்க வரப்ப
உன் போட்டாவ பார்த்து எங்கிறாங்கப்பா..

உன் பைக்கில் உன்னோடு
சுற்ற வேண்டிய நான்
ஒரு அறைக்குள் அடைபட்டுள்ளேன்
அப்பாவி என் அப்பா..

நான் எப்பமாச்சு அழுதேன்னா
அம்மா உடனே என் தாத்தா
போட்டோ முன்னாடி போய்
திருநீறு பூசி விடுறாங்க அப்பா..

நான் மறுக்காம சாப்பிடறேன் அப்பா..
பாப்பாவும் மறுக்காம சாப்பிடுறா அப்பா
அப்பத்தான் நீ நாளைக்கே வருவேன்னு
அம்மா எப்பவும் சொல்றாப்பா..

நீ சீக்ரம் வா அப்பா..
எதவுமே எனக்கு வேணாம்பா
நம்ம ஊர்ல எல்லா இருக்கேப்பா
நீ மட்டும் தான் இல்லப்பா..

நான் அழாமல் முடி வெட்ட
நான் உன் மடியில் இருக்கணும்பா
நீ வாங்கிவரும் பாரீன் பொம்மை
இனியெல்லாம் என்க்கு வேண்டாம்பா..

இப்பலாம் நல்லா நடக்றேன் ஓடுறேன்
நீதான் அதை பார்க்க இல்லப்பா..
பாடா படுத்றேன்னு மாமா வீட்ல
என்னை எல்லோரும் திட்றாங்கப்பா

நீ இந்தியா வரும்போது
நீ என்ன என்ன வாங்கணும்னு
லிஸ்டெல்லாம் இல்லையப்பா
நீ வந்தா போதும்பா..

உன் பிறந்த நாளுக்கு
என் ஆயிரம் முத்தங்கள் அப்பா
என் பிறந்த நாளுக்குமுன்
வந்துவிடுவாய் நம்புகிறேன் அப்பா

எழுதியவர் : நெல்லை பாரதி (31-Jul-14, 10:26 am)
பார்வை : 385

மேலே